நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தகூட்டத் தொடரின்போது, இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறியதாகும் கூறி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுதல் சிவசேனா 2 பேர் இடதுசாரிகள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 என மொத்தம் 12 எம்பிக்களை குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிறது. மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் மக்களவை மாநிலங்களவை ஆகிய அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய ஆளுங்கட்சி எம்பிகள் அமைதி நடவடிக்கைகளில் சரியாக கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான எம்பிக்கள் விடுப்பு எடுத்து விடுவதாக கூறுகின்றன டெல்லி வட்டாரத் தகவல்கள்.
இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு வராத எம்பிக்களை அழைத்து பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், ஆளுங்கட்சி எம்பிக்கள் அவைக்கு சரியாக வராததை கவனித்த பிரதமர் மோடி, ஒழுங்காக சபைக்கு வராத எம்பிக்கள் அடுத்த முறை எம்பியாக முடியாது என்று ஓப்பனாக எச்சரித்துள்ளார். இதையடுத்து எம்பிக்கள் ஒழுங்காக வருவதாக தெரிவித்துள்ளனர்.