கடந்த ஜூன் மாதத்தில் இறுதியில் மட்டும் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் பாதிப்பு இந்தியாவின் மொத்த பாதிப்பில் 63 சதவிகிதம் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமுல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மாத இறுதிக்கு முன் வரையிலும், கொரோனா பாதிப்பு சீராக கட்டுக்குள் இருந்த நிலையில், மே மாத இறுதி வாரத்திலும், ஜூன் மாதம் தொடக்கத்திலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் பாதிப்பு 70 சதவிகிதம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மொத்த நாட்டின் பாதிப்பில் 63% ஆகும். எனவே இம்மாநில மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக விழிப்புணர்வுடன் கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.