போதை பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் போதைப்பொருளை கடத்த முயர்ச்சித்துள்ளனர். இதனால் அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து 36 கிலோ ஹராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஹராயின் என்ற போதைப் பொருளின் மதிப்பு 180 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.