நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இதற்கு மத்தியில் பலரின் அச்சம் முந்தைய ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய பெண்களின் நிலை குறித்து தான். அரசு அதிகாரிகள் பலரும் தங்கள் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு உள்ளதாகக் கருதுகிறார்கள். மேலும் அரசாங்கத்தில் ஊடகத் துறையில் பணியாற்றி வந்த பெண்களின் பட்டியல்கள் திரட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தலிபான் ஆதரவு வெளிநாட்டு தீவிரவாதிகள் பெருந்திரளாக ஆப்கானிஸ்தானுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் வரும் பட்சத்தில் நிச்சயம் அங்கு அமைதி நிலவாது என்றும் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அரசுத் துறையில் பணியாற்றிய பெண்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.