Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற அக்கா-தம்பி…. உடல் நசுங்கி பலியான சிறுவன்…. சென்னையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் வர்ஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு வினய் என்ற சகோதரர் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்காள், தம்பி இருவரும் பூந்தமல்லியில் இருக்கும் நிலத்தை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளனர். இவர்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக வர்ஷா பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மொபட்டில் இருந்து அக்காள் தம்பி இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சிறுவன் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே வினய் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். இந்த விபத்தில் வர்ஷா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |