இருசக்கர வாகனம் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவர் கடந்த 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முத்துகுமார் நாமக்கலில் இருந்து கரூர் செல்வதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நிலை தடுமாறி முத்துகுமார் மொபட் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாடுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முத்துகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.