மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மாதேசம்பாளையத்தில் ரங்கசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் வசந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயற்சி செய்த போது அப்பகுதி வழியாக சென்ற கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இந்த விபத்தில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ரங்கசாமியை மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரங்கசாமியை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ரங்கசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.