மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உத்திக்காபாளையம் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விக்னேஷ் உலகபாளையம் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான கோவிந்தன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.