உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் என்ற மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் மோனு. 12 வயது சிறுவனான இவர் சம்பவத்தன்று செல்போன் பேட்டரியை மட்டும் தனியாக சார்ஜ் செய்யும் யுனிவர்சல் சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் செய்துள்ளார். இதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து சார்ஜரில் இருந்து பேட்டரியை எடுத்து பின்பு சார்ஜ் ஏறி விட்டதா? என்பதை பார்ப்பதற்காக நாக்கை பேட்டரியில் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டரி வெடித்து சிதறியுள்ளது.
இதனால் அவருடைய முகம் முழுவதுமாக சிதைந்துள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அழைத்து சென்ருள்ள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் கதறி அழுத குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுக்காமலேயே சிறுவனின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.