Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொபைல் ஆப் மூலமாக வாங்கிய கடன்…. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மொபைல் ஆப் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை தவணை முறையில் அந்த பெண் முழுவதுமாக செலுத்திவிட்டார். ஆனாலும் கடன் தொகையை மீண்டும் கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த சில மர்ம நபர்கள் பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழி இன்றி அந்த பெண்ணும் 3 லட்ச ரூபாய் வரை அந்த நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். அதன் பிறகும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பெண்ணை தொந்தரவு செய்தனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரின் செல்போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் அனுப்பியதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |