உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அறிமுகம் இல்லாதவர்களின் செல்போன் எண்ணை சேவ் செய்யாமல் அந்த நம்பருக்கு மெசேஜ் செய்ய ஏதுவாக டைரக்ட் மெஸேஜ் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.