அமேசான் நிறுவனம் “மொபைல் சேவிங்ஸ் டே” என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஒன் பிளஸ், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் சிட்டி பேங்க் கார்டுகள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு விற்பனை வருகின்ற 9ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. இத்துடன் x5 சலுகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களைப் பொருத்தி சலுகைகளை அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.