நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு புதிய வங்கி கணக்கு துவங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரையிலும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை மிக அவசியமாக இருக்கிறது. ஆதார் அட்டையிலுள்ள 12-இலக்க அடையாள எண் உங்களது விபரங்கள் தொடர்பாக அடையாளம் காண முடியும். ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம். ஆனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் இருந்தாலும் ஆன்லைன் வாயிலாக எளிய வழிமுறைகளை கடைபிடித்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன்பாக இந்த வசதி கொடுக்கப்படாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய மொபைல் எண் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தேவை இல்லை. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இன்றி ஆதார் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது பார்க்கலாம்.
ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழிமுறைகள்:
# முதலில் யுஐடிஏஐ-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று “மை ஆதார்” என்பதனை டைப் செய்ய வேண்டும்.
# தற்போது “ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு” என்பதனைக் கிளிக் செய்யவும்.
# இப்போது இங்கே 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்கும்.
# இங்கே நீங்கள் ஆதார் எண்ணுக்குப் பதில் 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) உள்ளிடலாம்.
# இந்த செயல்முறைக்குப் பின் உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு (அல்லது) கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
# பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இன்றி கார்டை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் “எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
# உங்களின் மாற்றுஎண் (அல்லது) பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
# பின் “Send OTP” என்பதனைக் கிளிக் செய்யவும்.
# இதையடுத்து நீங்கள் உள்ளிட்ட மாற்று எண்ணில் ஒருமுறை கடவுச்சொல் (OTP) வரும்.
# அதன்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, இறுதியில் ‘சப்மிட்’ என்பதனைக் கிளிக் செய்யவும்.
# இந்நிலையில் ஒருபுதிய பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.
# ரீபிரிண்டிங் சரிபார்ப்பிற்கு “ப்ரிவ்யூ ஆதார் லெட்டர்” எனும் ஆப்ஷன்கிடைக்கும்.
# இதனை தொடர்ந்து மேக் பேமண்ட் என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து கட்டணத்தை கொடுக்க வேண்டும்.