Categories
தேசிய செய்திகள்

மொபைல் போன் திருடியதாக சந்தேகம்!… 9 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா?…. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்தியபிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் லவகுஷ் நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவனை மொபைல் போன் திருடியதாக சந்தேகத்தின்படி அதே கிராமத்தில் வசிக்கும் சிலர் பிடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அச்சிறுவனுக்கு தண்டனை தரும் நோக்கில் ஒரு கிணறுக்குள் கயிறு கட்டி தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனிடையில் கிணற்றுக்குள் கயிறில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்த சிறுவனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் சிங் கூறியதாவது, சிறுவனை கட்டாயப்படுத்தி மொபைல் போன் திருடியதாக சந்தேகத்தில் கிணற்றுக்குள் தொங்கவிட்டுள்ளனர் என்று சிறுவனின் தந்தை புகாரளித்துள்ளார்.

எங்கள் காவல்துறையினர் புகாரை பெற்றதும் உடனே சம்பவ பகுதிக்கு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விஷயம் குறித்து குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் புகாரளித்தாலோ (அல்லது) ஏதேனும் விவகாரம் எங்களது கவனத்திற்கு  வருமென்றால் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |