Categories
பல்சுவை

மொபைல் போன் தீப்பிடித்து வெடிப்பது எப்படி?… தடுக்க என்ன செய்வது?…. இதோ சில டிப்ஸ்….!!!!

எலெக்ட்ரிக் வாகனங்கள் முதல் ஸ்மார்ட் போன்கள் வரை தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில தினங்களுக்கு முன் ரெட்மி 6A-இல் வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். அதேபோன்று பரேலியைச் சேர்ந்த ஒரு சிறுமி போன் வெடித்ததில் உயிரிழந்தார். இப்போது சியோமியின் மற்றொரு போன்வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. Redmi Note 11T Pro வெடித்ததால் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் விபத்துக்கு பின் வெடித்த போனின் தோற்றம் குறித்த வீடியோ வைரலாகியது. ரெட்மி நோட் 11டி ப்ரோவின் பேட்டரி வெடித்த சம்பவம் சீனாவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த போன் Redmi K50i என மறு பெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

டிக்டாக்கில் பகிரப்பட்ட வீடியோவில் தொலைபேசியின் திரை மற்றும் பின்பேனல் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. திரைக் கண்ணாடிகள் உடைந்துள்ளது. அதேசமயத்தில் பின் பேனலிலுள்ள கேமரா தொகுதியின் சில பகுதியைத் தவிர்த்து அனைத்தும் எரிந்து போய்விட்டது. சென்ற வருடம் , OnePlus Nord 2 ஸ்மார்ட் போன் வெடித்த சம்பவங்கள் நடந்தது. அதன்பின் நிறுவனம் பல பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கியது. ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட் போன் வெடிக்கும்போது, ​​அது சாதனம் தயாரிப்பாளரின் தவறல்ல. பல்வேறு நேரங்களில் ஸ்மார்ட் போன்கள் பயனாளர்களின் தவறுகளால் வெடித்துச் சிதறுகிறது.

ஏராளமான செல்போன் வெடிப்பு சம்பவங்கள் போனை சார்ஜ்செய்யும் போது ஏற்படும் தவறுகளால் நிகழ்கிறது. ஸ்மார்ட் போன் (அல்லது) மொபைல் போனை நீண்டநேரம் சார்ஜ் செய்வதால், போனின் பேட்டரி சூடாகிவிடுகிறது. இதன் காரணமாக பேட்டரி வெடித்து விடும். பொதுவாக மக்கள் இரவில் போனை சார்ஜ்செய்து வைக்கின்றனர். இதனால் போன் அதிகளவு சூடாகி வெடிக்கும். ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகிய எந்த எலக்ட்ரானிக் சாதனத்திலும் இணக்கமான சார்ஜரைப் பயன்படுத்தாமல் போனால், போனில் ஷார்ட்சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்து விடும். பல்வேறு நேரங்களில் பயனாளர்கள் தங்களது மொபைல் போனின் அசல் சார்ஜருக்குப் பதில் வேறு சில தொலைபேசிகளின் சார்ஜரைக் கொண்டு சார்ஜ் செய்கின்றனர்.

இதன் காரணமாக பேட்டரி அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. பலமுறை மொபைல் போனின் சார்ஜிங் போர்ட் மற்றும் சார்ஜர் போன்றவை ஈரமான இடத்தில் வைக்கப்படுகிறது. இதனால் ஷார்ட்சர்க்யூட் ஏற்பட வாய்ப்புள்ளது. தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு முன்பு சார்ஜிங் போர்ட்டில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிசெய்துக் கொள்ளுங்கள். இது போனில் எலக்ட்ரானிக் ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதை தடுக்கஉதவும். பேட்டரியை 80 % மேல் சார்ஜ் செய்யாதீர்கள். அப்படி செய்தால் பேட்டரி சேதமடையும். அத்துடன் போனின் பின் பேனல் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கிறது.

Categories

Tech |