இணையதளம் மூலமாக 7 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் பெருவிளையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் [வயது 22] என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் செல்போன் கடை வைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இவர் ஒரு பிரபல செல்போன் கம்பெனியில் இணையதள முகவரியில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ளார். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மேலாளர் ராம்குமார் என்பவர் ஆல்பட் செல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
அவர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும், உங்களுக்கு தேவையான செல்போன்களை அனுப்பவும், வரி மற்றும் டீலர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதற்காக 7,88,450 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் கூறினார். எனவே ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின், ராம்குமார் கொடுத்த வங்கி கணக்குகளில் இந்த பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு ராம்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.