Categories
மாநில செய்திகள்

“மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம்”…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |