Categories
அரசியல் மாநில செய்திகள்

மொழி திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை…. பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி….!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றால் நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு மட்டும் தான் அந்த தகுதி உள்ளது. ஆனால் மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அமித்ஷாவின் கருத்து தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், இந்தியாவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் மொழியாக நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |