Categories
சினிமா தமிழ் சினிமா

மொழி பிரச்சனை: நடிகர் சித்தார்த் மீது பரபரப்பு புகார்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக அரசியல் குறித்த கருத்துகளை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை விமானம் நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் சொன்னார். இது பற்றி சமூகவலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ளதாவது “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்குள்ளானேன்.

வயதான என் பெற்றோர் கொண்டுவந்த பைகளிலிருந்த நாணயங்களை எடுக்கும்படி கூறினார்கள். மேலும் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இந்தியாவில் இப்படித் தான் இருக்கும் என சொல்லி கடுமையாக நடந்து கொண்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலானதை அடுத்து சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன் இணையப்பக்கத்தில், “சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக  எழுந்த குற்றச்சாட்டு பற்றி உரிய விசாரனை நடந்த வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர், சித்தார்த் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், மொழி பிரச்சனையை தூண்டும் விதமாக சித்தார்த்தின் சமூகவளைதளப்பதிவு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |