திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சரக்கு வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிரங்காட்டுபட்டியில் சக்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் பூ விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்தி வீட்டிற்கு நத்தத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் குட்டுபட்டி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சரக்கு வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.
இதில் சக்தி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சக்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சரக்கு வேன் டிரைவர் திருமுருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.