நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் டீசர் புத்தாண்டில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
நடிகர் மோகன்லால் மீனா உட்பட ‘த்ரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இந்த படத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் வருகிற புத்தாண்டில் நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மோகன்லாலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.