Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 13-ஆம் தேதி ரிலீஸாக இருந்த இந்த படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் வெளியாகவில்லை. இதனிடையே இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஓணம் பண்டிகைக்கு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |