மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி, பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரோனி ராஃபெல் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க #MaraikayarArabikadalinSingam திரைப்படத்தை #VCreations சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறேன். @Mohanlal @priyadarshandir @akarjunofficial @kalyanipriyan @KeerthyOfficial pic.twitter.com/jdBMG5G4kv
— Kalaippuli S Thanu (@theVcreations) November 18, 2021
இந்நிலையில் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வரலாற்று சிறப்புமிக்க மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது .