மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி விசிட் அடித்துள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், விடுதலை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி விசிட் அடித்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன், ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரோனி ராஃபெல் இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. தற்போது மரைக்கார் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதி விசிட் அடித்தபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.