Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான தகவல்…!!!

மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் உருவான திரிஷ்யம்-2 படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அறிவித்துள்ளார்.

Superstar Mohanlal is 60 years 'young' | Mohanlal| actor Mohanlal

அதேபோல் இவர் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் புரோ டாடி, அலோன், டுவல்த் மேன், புலிமுருகன் இயக்குனர் இயக்கும் படம் ஆகிய படங்களையும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இந்த படங்களை திரையரங்குகளில் திரையிட்டு 21 நாட்களுக்குப் பின் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் 80 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நிபந்தனை விதித்ததால், தியேட்டருக்கு பதிலாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |