பிரமாண்ட நடிகரான மோகன்லால் நடித்த திரைப்படத்தின் தேதி மாற்றப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருகின்றனர்.
சினிமா திரையுலகில் மிக முக்கிய, பிரபலமானவர் மோகன்லால். இவர் நடிப்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் கடற்கரை தலைவராக இருந்த குஞ்சாலி மரைக்காயர் வம்சாவளியில் நான்காவது குஞ்சாலி மரைக்காயரின் வீரம் நிறைந்த அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாக இருந்த நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் இம்மாதம் மார்ச் 26ம் தேதி வெளியாக உள்ள நிலையில் மீண்டும் அப்படக்குழுவினர் தேதியை மாற்றியிருக்கின்றனர். ஆகையால் இப்படம் மே 13ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.