Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா… எந்த படத்தில் தெரியுமா?…!!!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிகை மீனா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இதற்குமுன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

Not 'Empuraan', Mohanlal to star in and as 'Bro Daddy' in Prithviraj  Sukumaran's second directorial

இதனிடையே பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திரிஷ்யம் 1, திரிஷ்யம் 2 ஆகிய படங்களில் மோகன்லால், மீனா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |