Categories
தேசிய செய்திகள்

மோகன்லால் செய்த காரியத்தால்… கோயில் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி…!!!

குருவாயூர் கோயிலின் வாசல் வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்ததற்காக பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு வந்திருந்தார். அப்போது அவருடைய கார் கோவிலின் பிரதான நுழைவாயில் வரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று குறைந்து வந்தாலும் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் கோவில்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கியமாக குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் குருவாயூர் கோயிலில் பாதுகாப்பு காரணங்களால், கோவில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி மோகன்லால் மற்றும் அவரது மனைவி வந்த காரை கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்க செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தடையை மீறி வாகனத்தை அனுமதித்தால் பணியில் ஈடுபட்ட மூன்று ஊழியர்களை கோவில் நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |