இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் சென்ற அக்டோபர்5-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கின்றது. இத்திரைப்படத்தை அடுத்து மோகன் ராஜா நடிகர் நாகார்ஜுனா நடிக்கும் திரைப்படத்தை இயக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. காட்பாதர் திரைப்பட த்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே நாகார்ஜுனாவிடம் மோகன் ராஜா கதை கூறியதாகவும் அது பிடித்து போனதால் அவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.