மோசடி செய்வதில் தான் பிஹெச்டி முடித்துள்ளதாக கர்நாடக பாஜக அமைச்சர் ஸ்ரீராமலு பெருமையுடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை காப்பியடித்து தேர்ச்சி பெற்ற தான் மோசடி செய்வதில் பி எச் டி முடித்துள்ளேன். பெல்லாரியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்ரீராமலும், தினமும் வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றார் என்று ஆசிரியர் ஒருமுறை கேட்ட கேள்விக்கு தான் காப்பியடித்து தான் தேர்ச்சி பெற்றதாக பதில் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு தேர்வையே காப்பி அடித்து தான் பாஸானேன் என்று கூறிய பாஜக பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமலும் காப்பியடிப்பதில் தான் பிஎச்டி முடித்தவர் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.