ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் KYC இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் சிம் லாக் ஆகிவிடும் என்றும் மீண்டும் ஆக்டிவேட் செய்ய ஒரு நம்பருக்கு அழையுங்கள் என்று மெசேஜ் வருவதாகவும், அதன் மூலம் வங்கி தகவல்களை தேடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.