“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் .
இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது குறித்து லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையிலானது என்றும் இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.