Categories
சினிமா

மோசமான உடல்நிலையால் சிங்கப்பூர் செல்லும் சமந்தா?…. உண்மை என்ன?….. குடும்பத்தினர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சமந்தா மயோசிட்டி சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் சில நாட்கள் கழித்து தனது உடல்நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறி கண்ணீர் மல்க ஒரு பதிவை பகிர்ந்த நிலையில் அது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே சமீப காலமாக சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாவதற்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சமந்தா சிங்கப்பூர் செல்ல உள்ளதாக மீண்டும் தகவல் ஒன்று பரவி வந்தது. இதைத் தொடர்ந்து சமந்தா பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |