கொரோனா சூழலை எதிர்கொள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை செய்கிறார்.
நாட்டில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதோடு ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அடுத்த மாதம் இறுதியில் உச்சம் பெறும் என சுகாதாரத் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.
இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கொரோனா சூழல் பற்றி மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.