கொரோனாவின் 2ஆம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கூகுள் தலைமை செயல் அதிகாரி மற்றும் அமெரிக்க பிரதமர் உதவ முன்வந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றின் முதலாவது அலையை இந்தியா அனைவரும் பாராட்டத்தக்க விதத்தில் சமாளித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாவின் 2ஆம் அலையில் இந்தியா மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர்பாதிக்கப்பட்ட நிலையில், 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை வாங்குவது முதல் பல்வேறு உதவிகளை செய்யும் வகையில் 135 கோடி ரூபாயை GiveIndia மற்றும் UNICEFஆகிய அமைப்புகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த இந்தியாவின் தற்போதைய நிலைமையை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்தோ அமெரிக்கரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா இந்தியாவின் தற்போதைய நிலையை கண்டு என் இதயமே நொறுங்கி போனது போல் உள்ளது என்றும், இந்தியாவிற்கு ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகளை வாங்க உதவும் வகையில் பொருள் வகையிலும், தொழில்நுட்ப வகையிலும் உதவ தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன் கொரோனா காலத்தில் அமெரிக்கா தடுமாறியபோது இந்தியா உதவியது போல் நாங்களும் இந்தியாவிற்கு உதவ தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.