சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானத்தில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் 2.40 மணிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 119 பேர் பயணம் செய்தனர். கோவை அருகே சென்ற போது பலத்த காற்று வீசியதால் கோவை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்தது.
வானிலை மோசமான காரணத்தினால் கோவையில் தரை இறக்க முடியாததால் மீண்டும் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மாலை 4.15 மணிக்கு அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பி ,அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 119 பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.