வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செல்லாமல் இருந்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக வங்காளதேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
ஆனால் வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா, சிப்காங் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.