தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தினர். இதற்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், “இந்தாங்க இது தான் என்னுடைய வீட்டு அட்ரஸ், தைரியமிருந்தா என் வீட்டுக்கு ஐ.டி ரெய்டு வாங்க. பிரதமர் மோடிக்கு உதயநிதி மட்டுமல்ல. இங்கு உள்ள கிளை செயலாளர்களும் கூட பயப்பட மாட்டார்கள்” என்று என்று சவால் விடுத்துள்ளார்.