திமுக அமைச்சர்கள் வார்த்தையை கவனமாக பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய சேகர்பாபு காலையில் ஒரு பேட்டி கொடுத்ததாக நண்பர் வந்து சொன்னார். பிஜேபி நிறைய குற்றம் சுமத்துகிறார்கள், பிஜேபியை எப்படி கையாளுவது என்று எங்களுக்கு தெரியும் என்றார். தொட்டு பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். மோடிஜி டெல்லியில் இருக்கிறார். தொடுவார்கள் என்று காத்திருக்கிறோம், தொட்டுப்பார்க்கட்டும்.
ஏனென்றால் சேகர்பாபு அவர்களுக்கு சரியாக தெரியாது ஒரு துறைமுக தொகுதியில் இருந்து அரசியல் பண்ணிட்டு இருக்கிறார். இந்த கட்சி 11 கோடி பேர் மெம்பர்ஷிப் வச்சி அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். அதே போல செந்தில் பாலாஜியும், சேகர்பாபு அவர்களும் ஒரு தொகுதியுடைய ராஜா என்று சொல்லி சுற்றிக் கொண்டிருக்கிறார் தொட்டு பார்க்கட்டும். அவர்களுக்கு தெரியல மோடி ஜி யார் என்று தெரியவில்லை.
பிஜேபி பற்றி தெரியவில்லை. ஊழல் செய்தால் தட்டிக் கேட்போம் இதற்கு மிரட்ட ஆரம்பித்தால் மிரட்டட்டும். அதனால் இப்பொழுதாவது நம்முடைய தமிழகத்தினுடைய முதலமைச்சர் விழித்துக் கொள்ள வேண்டும். இங்க சாதாரணமாக அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை இழப்பதற்கு ஒன்றும் கிடையாது. மோடிஜியினுடைய முழு உத்தரவு இருக்கிறது. தமிழ்நாடு பாஜக இப்படித்தான் இயங்க வேண்டும், தமிழக பாஜக தமிழக மக்களுடைய நலனுக்காக இருக்க வேண்டும். குற்றங்களை எதிர்க்கவேண்டும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
அதனால் இதை அமைச்சர்களும் புரிந்து கொண்டு அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தையை சரியாக பயன் படுத்துவார்கள் என்று நம்புகின்றோம். இந்த ஒரு தொகுதிக்குள் அரசியல் செய்பவர்கள் எல்லாம் தயவு செய்து மிரட்டுகின்ற வேலையை வைத்து கொள்ளக் கூடாது. வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கப்படும் என தெரிவித்தார்.