உத்தரகாண்ட் மாநிலத்தின் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக உத்தம்சிங் நகர் கிச்சா மண்டியில் விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அதில் அவர் கூறியதாவது, “முன்பெல்லாம் இந்தியா பிரதமர் என்ற ஒருவரால் வழி நிறுத்தப்பட்டது. தற்போது ராஜா என்பவரால் வழி நடத்தப்படுகிறது. காரணம் மோடி யார் பேச்சையும் கேட்பதில்லை.
ஒரு ராஜா எவ்வாறு கூலி தொழிலாளர்களின் பேச்சை கேட்க மாட்டாரோ அதேபோல் மோடி யாருடைய பேச்சையும் கேட்பதில்லை.! என அவர் கூறினார். ராஜா தனக்கு கீழ் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் பேச்சை எவ்வாறு கேட்க மாட்டாரோ அதேபோல்தான் மோடியும் விவசாயிகளின் பேச்சை ஒரு வருடமாக கேட்கவில்லை என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் இந்தியா ஒரு ஒன்றியம் ராஜ்யம் அல்ல மோடி மாநில அரசுகளின் உரிமையை பறித்து மாநில அரசுகளை வஞ்சிக்கிறது என அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.