Categories
அரசியல்

“மோடியின் பொய்யை இதனால கூட பொறுத்துக் கொள்ள முடியல்ல”….! கலாய்த்து தள்ளிய ராகுல் காந்தி…!!!

உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது டெலிபிராம்டர் கருவி பழுதடைந்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது திடீரென டெலிபிராம்டர் கருவி பழுதடைந்தது. இதனால் பிரதமர் மோடியின் உரை தடைபட்டது. இதனை அறிந்த பிரதமர் என்னுடைய குரல் உங்களுக்குக் கேட்கிறதா..? என்று கூறி நிலைமையை ஒருவழியாக சமாளித்துக் கொண்டார்.

தொடர்ந்து கருவிலிருந்த பழுது நீக்கப்பட்ட உடன் மோடி தனது சிறப்புரையை தொடங்கினார். இது குறித்து அறிந்த ராகுல் காந்தி “மோடியின் பொய்யை டெலிபிராம்டர் கருவியால் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை..!!” என்று கூறி கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி “டெலிபிராம்டர் கருவியும் அதனை இயக்கி வரும் இல்லை என்றால் மோடியால் உரையாற்றவே முடியாது..!” என்று ஒரு வீடியோவில் கூறியிருந்தார். அதுவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்து பேசிய பாஜக வினர் ஒரு எந்திர கோளாறை வைத்து நாட்டின் பிரதமரை கிண்டல் செய்வதா..? என கேட்டுள்ளனர்.

Categories

Tech |