தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றது நடத்தை விதி மீறல் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் வங்கதேசம் சென்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்றும், இதனால் தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதாகவும் மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.