அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்.
டிரம்ப்பின் இந்திய வருகை பல்வேறு உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இரு நாடுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
நாம் தமிழர் சீமான் கூறுகையில் , பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஒரே எண்ணம் கொண்ட ஒரு தாய் பிள்ளைகள் என்று விமர்சித்துள்ள சீமான் குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கும் எதிரானது. இந்தியாவுக்கு சொந்த விமானம் இல்லாத நிலையில் மேலும் பல விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.