செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, விவசாயிங்க இவ்வளவு நாட்களாக டெல்லியில் உட்கார்ந்திருந்தாங்க, ஒரு 20 நிமிஷமா காத்திருக்கிறது பிரச்சனையே இல்ல, அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும், ஒரு பிரதமர் எந்த கட்சியை சார்ந்தவர் என்று நாம் பார்க்க மாட்டோம். நம் நாட்டினுடைய பிரதமர் என்றால் இதுவரைக்கும்….
அது காங்கிரஸ் பிரதமராக இருக்கட்டும், பாஜகவுடைய பிரதமராக இருக்கட்டும் வேற யாரு வேணாலும் இருக்கட்டும், ஒரு பிரதமராக பார்க்கும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நாம் பிரதமரை பார்க்க வேண்டும், அந்த மரியாதை தான் அவருக்கு கொடுக்க வேண்டும். அவர் வந்து ஒரு பிரதமர் இந்த நாட்டின் பிரதமர், மக்கள் யார் வாக்களித்தார்கள் அவர்களுக்கு மட்டும் அல்ல வாக்களிக்காதவர்களும் அவரு பிரதமர் தான்.
நம் நாட்டை உலக அளவில் அடையாளப்படுத்துகின்ற மிக மிக மிக முக்கியமானவர் ஒரு பிரதமர். நம் நாட்டின் பிரதமர் யாரு, அந்த நாடு எப்படி இருக்கும் என்று தான் உலகமே பார்க்குது, அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பார்க்கும் பொழுது இன்றைக்கு உலகம் முழுவதும் எல்லாரும் திரும்பி பார்த்து வியந்து பார்க்கும் அளவுக்கு பிரதமர் மோடி அவர்கள் இருக்கிறார்.
உலகத்தில் இருக்கும் அத்தனை பெரிய தலைவர்கள் அவர்களை பாராட்டி பிரதமர் எப்படி இருக்க வேண்டும் அப்படி சொல்லும்போது பிரதமர் மோதி நம்பர் 1ல் வந்திருக்கிறார். ஒருமுறை அல்ல பலமுறை. ஆனா அப்படி ஒரு பிரதமருக்கும் பாதுகாப்பு கொடுக்காமல் காங்கிரஸ்காரர்கள் இப்படி பண்றது அவங்களுடைய புத்தி எப்படி இருக்கு ?
அவர்களுடைய செயல் எப்படி இருக்கு ? தனக்கு ஆட்சி கைக்கு வரணும், பவர் கைக்கு வரணும் என்பதற்காக எந்த அளவுக்கு நாங்க இறங்கி போறதுக்கு தயாராக இருக்கிறோம் அது நிச்சயமாக காட்டுது, இதை நாங்கள் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.