திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக எடப்பாடி தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டதாகவும், மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பிலிருந்து சிலரிடம் பேசி பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக 2 பேருக்குமே தனியாக சந்திப்பதற்கு நேரம் கொடுக்கபடவில்லை. ஏனென்றால் மோடி பயணதிட்டம் ஏற்கனவே இறுதிசெய்யப்பட்டதால் இந்த நேரம் கொடுக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து தொடர் முயற்சிக்கு பின்பாக நேரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.