மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜின் படம் இடம் பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கிய நிலையில் தற்போது மேற்கு வங்க அரசும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது.
தடுப்பூசி சான்றிதழில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 45 வயது வரம்பில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மம்தாவின் படம் இடம்பெற்றுள்ளது.