மேற்கு வங்காளப் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் வார்த்தைப் போர் நடந்தது.
முதல்வர் மம்தா பானர்ஜி நந்தகுமார் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது பாஜக என்பது பாரதிய ஜனநாயக கட்சி என்று அர்த்தம் இல்லை பாரதிய ஜோகோனா கட்சி என்று அர்த்தமாகும் என்று கூறியுள்ளார் . மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிரச்சாரத்தின்போது இரு தரப்பினரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழலின் முந்தைய பதிவுகளை முறியடித்து இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மம்தா பானர்ஜி கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மோடியை பேசியுள்ளார்.
இதனிடையில் நான் மக்களவை எம்.பி.யாக ஏழுமுறை இருந்ததாகவும் எனக்கு அனைத்து பிரதமர்களை பற்றி நன்றாக தெரியும் என்றும் ஆனால் இந்த மோடியை போன்று ஒரு இரக்கமற்ற கொடூரமான பிரதமரை பார்த்ததே இல்லை என்று கூறினார். மேலும் பாஜக கட்சி என்பது அரக்கர்கள் பேய்கள் துச்சாதனன் துரியோதனன் ராவணன் மற்றும் அமைதியின்மை போன்றவைகளின் மொத்த உருவம் என்று கடுமையான முறையில் பேசியுள்ளார்.