2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்வேன் என அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது போலவே வரும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடும் தோல்வியைச் சந்திக்கும் என மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மமதா பானர்ஜி மேற்கு வங்க மக்கள் பாஜகவை எவ்வாறு தோற்கடித்தார்களோ அதே போல் இந்திய மக்கள் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தலில் பாரதிய ஜனதாவை பின்னுக்கு தள்ளுவார் என கூறினார்.
மேற்குவங்காளத்தில் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்று அவர் கூறினார். மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அயராது உழைப்பார் என அவர் பேசினார். தேசிய அரசியல் தான் தனது ஒரே குறிக்கோள் என்று கூறிய அவர் தனது கட்சியை விரிவுபடுத்துவதற்காக மேற்கு வங்காளத்திலிருந்து அண்டை மாநிலங்களிலும் தனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். மேலும் அடுத்ததாக நடைபெறக்கூடிய திரிபுரா, கோவா சட்டமன்றத் தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.