ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சாடி பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கூறியதாவது, ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால் குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கின்றார். அவர் தான் தற்போது இந்தியாவின் பிரதமராக (மோடி) இருக்கிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியும் ஹிட்லர் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார். பிலாவல் பூட்டோவின் இந்த சர்ச்சை கருத்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க சார்பாக போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பெண் மந்திரியான ஷாஜியா மர்ரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவருக்கு கூறியதாவது, எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு தெரியும் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது.
இதை இந்தியா மறந்து விட வேண்டாம். மேலும் எங்கள் அணு ஆயுத நிலைப்பாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. அதற்கான தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க போவதில்லை தாக்கப்படும்போது பாகிஸ்தான் அமர்ந்திருக்காது. சம பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய மதத்தினரை பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புபடுத்துகிறது என கூறியுள்ளார்.
இதனையடுத்து ஷாஜியா வெளியிட்டுள்ள twitter செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, பாகிஸ்தான் ஒரு பொறுப்புள்ள அணு ஆயுத நாடு. இந்தியாவில் உள்ள சில ஊடகவாசிகள் அச்சம் உண்டாக்க முயற்சி செய்கின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் தான் அதிகமாக தியாகம் செய்திருக்கிறது என கூறியுள்ளார். இந்திய மந்திரியின் தூண்டிவிடும் கருத்துக்கு பூட்டோ பதில் அளித்துள்ளார். அது தவிர மோடி அரசு பயங்கரவாத செயல் மற்றும் பாசிசம் போக்கை ஊக்குவித்து வருகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.