Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இத்தோட நிறுத்திக்கோங்க… இல்லனா அவ்ளோ தான்… மோடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்…!!

திமுக பற்றி பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், “திமுகவை குற்றம் சாட்ட பிரதமர் மோடிக்கு உரிமை கிடையாது. தான் பிரதமர் என்பதை மறந்து தரமற்ற முறையில் திமுக பற்றி மோடி விமர்சித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.திமுகவைப் பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி பாஜகவில் சேர்ந்த ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |